Wednesday, 12 January 2011

கிளைத்தெழும் கனவுகள் ...

என்றோ  வெட்டி 
மழுங்கடிக்கப்பட்ட வேர்கள்..
கிளைதெழுகின்றன என் கட்டிலில்

என்பு சதை ஊடுருவி 
குருதி குடித்தபடி 
உடற்பாகங்களில் விழுதூன்றி 
வியாபிக்கிறது மரமென 

உலர்ந்த செதில்களின் 
குறுக்குவெட்டில் 
ஒளிந்திருக்கிறது 
ரம்பத்தின் பற்தடம்...

ஒளிரும் விளக்கில் உருகி 
வெள்ளை அணுக்கலேங்கும்
சுயம் இருத்தும் 
ஈர பச்சையத்துடன் ...

பூக்கள் ரத்தம் சொட்டும் 
மற்றுமொரு  இரவில் 
மீளும் 
ரம்பத்தின் தீட்டலும் கனவின் 
வேர் கிளைத்தலும்....  

No comments:

Post a Comment